திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் வேன் நிறுத்தம் கிளை துவக்க விழா நடைபெற்றது. தலைவர் பி. முருகையன் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணன், மாவட்ட சாலை போக்குவரத்து சம்மேளனத்தின் மாவட்டத் தலைவர் கே. சரவணன், செயலாளர் கே. நாகராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் காங்கேயன், மாவட்டச் செயலாளர் பாரி, வே. சங்கர், டி. வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.