districts

img

மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மருத்துவ கல்லூரிக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்ததை கண்டித்து ஸ்டான்லி அரசு  மருத்துவமனை மற்றும் கல்லூரி வாசல் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை உறுப்பினர் செல்வராஜ்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற பொதுச் செயலாளர்  டாக்டர் அறம். டாக்டர் சாந்தி, டாக்டர் கீர்த்தி வர்மன், வடசென்னை மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்  உள்பட பலர் கலந்துகொண்டனர்