districts

சாதிச்சான்றிதழ் கேட்டு தீக்குளித்த வேல்முருகன் குடும்பத்திற்கு இழப்பீடு தமிழக அரசுக்கு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை,அக்.13- சாதி சான்றிதழ் கேட்டு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வேல்முருகன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தமிழ் நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத்  தலை வர் பி.டில்லிபாபு, ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச்செயலாளரிடம் அளித்துள்ள மனுவிவரம் வருமாறு: தமிழ்நாட்டில் பூர்வீக பழங்குடிமக்களான இருளர், காட்டுநாயக்கன், மலையாளி, மலைக்குறவன், கொண்டாரெட்டி, குருமன்ஸ்-மலைவேடன் , பளியர் ஆகிய இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு சமீபகாலமாக, சாதிச்சான்றிதழ் வழங்குவது திட்டமிட்டே மறுக்கப்பட்டு வருகிறது.  குறிப்பாக, திருவள்ளுர் மாவட்டம் , திருத் தணி, வருவாய்க்கோட்டத்தில் வசிக்கும்  கொண்டாரெட்டி, காட்டு நாய்க்கன்  இனமக்களுக்கு, கடந்த 5 ஆண்டுகாலத்தி ற்கு மேலாக சாதிச்சான்று வழங்கப்பட வில்லை.  இதன் காரணமாகவே திருப் பெரும்புதூரை சேர்ந்த வேல்முருகன்  சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அக்.11அன்று உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து உயிரை மாய்த்து கொண்ட கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. வேல்முருகன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25லட்சம் நிவாரணம் உடனே வழங்க வேண்டும், அவரது குழந்தைகளின் கல்வியை முழுவதுமாக அரசு ஏற்றுக் கொள்வதுடன், தமிழ்நாட்டில் வாழும் மலைக்குறவன் பழங்குடி மக்களுக்கு இனச்சான்றிதழ் காலதாமின்றி வழங்கிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட் டுள்ளது.

;