சென்னை, நவ.25- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்ட லம் 4ஆவது வார்டு ராமநாத புரம் பகுதியில் தெரு விளக்கு கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி துவங்கியது. 4ஆவது வார்டில் சுமார் 2000க்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு பரா மரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பெரும்பான்மை யான தெருவிளக்கு கம்பங்கள் பழுதடைந்து விழுந்து விடுகின்றன. ராம நாதபுரம், முல்லை நகர், வி.பி. நகர், ஏடி காலனி ஆகிய பகுதிகளில் தெரு விளக்கு கம்பங்கள் அடிக்கடி விழுந்தன. அத்தகைய கம்பங்களை மாற்றி அமைக்க கடந்த ஒரு வருட காலமாக மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெய ராமன் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தார். இதையடுத்து அந்த பகுதிகளில் தெரு விளக்கு கம்பங்களை மாற்றி அமைக்க தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தற்போது ரூ.6.30 லட்ச மதிப்பீட்டில் ராமநாதபுரத்தில் உள்ள 84 தெரு விளக்கு கம்பங்களையும் மாற்றி அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார். இதில் கார்த்திகேயன், கணேஷ், ராமநாதபுரம் கிராம சேவா சங்கத்தின் தலைவர் காமராஜ், செய லாளர் சுரேஷ்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் கே. வெங்கட்டையா, அலமேலு, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.