districts

img

10 ஆண்டு கால போராட்டம் வெற்றி வேட்டைக்காரன் இன மக்களுக்கு குடிமனை பட்டா கிடைத்தது

பத்தாண்டு கால போராட்டத்திற்கு பிறகு வேட்டைக்காரன் இன மக்களுக்கு குடி மனை மற்றும் பட்டா கிடைத்துள்ளது. இதனால் அந்த மக்கள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் அருகே விளாம்பக்கம் கிராமத்தில், மாவட்ட நெடுஞ்சாலை ஓரமாக 21 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இரண்டு தலைமுறையாக வாழ்ந்து வரும் இந்த மக்கள் பீடி சுற்றுதல், விவ சாய கூலி வேலை ஆகிய வற்றில் ஈடுபட்டு வரு கின்றனர். சாலையோரம் குடிசை அமைத்து வாழ்ந்து வந்ததால் அந்த இடத்திற்கு பட்டா கிடைக்க வில்லை. இதனால் அரசு சலுகை களையும் அந்த மக்களால் அனுபவிக்க முடிய வில்லை. இந்த நிலையில் மாற்று இடம் கேட்டு நீண்ட காலமாக போராடி வருந்த னர். மாற்று இடம் தரு வதற்கான நிலம் இருந்தும் அதிகாரிகள் இடத்தை தரவில்லை. சாலையோரம் வசித்து வரும் மக்களை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் வற்புறுத்தி வந்தனர். இதனையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் இணைந்து 4 ஆண்டுகளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக ஞாயி றன்று (மார்ச் 27) அதே பகுதி யில் தோப்பு புறம் போக்கு நிலத்தில் 75 செண்ட் நிலத்தில் 21 குடும்ப ங்களுக்கும் குடிமனை பட்டா வழங்கப்பட்டது. பட்டா கொடுத்துள்ள தற்கு மகிழ்ச்சியை தெரி வித்துள்ள வேட்டைக்காரன் இன மக்கள், அந்த இடம் எங்குள்ளது என்பதை அளந்து கல் நட வேண்டும்.

மேலும், தொகுப்பு வீடு கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்து ள்ளனர். இதில் விடுபட்ட 6 குடும்பங்களுக்கும் வீட்டு மனை மற்றும் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பட்டா வழங்கும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் பி.கண்ணாயிரம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இ.கங்காதுரை, மாநில குழு உறுப்பினர்கள் டில்லி, ஏகன், ஆறுமுகம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கலையரசன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.              (ந.நி)

;