districts

img

தெருவை மறித்து சுற்றுச்சுவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு

சென்னை, மே 22 - மக்கள் பயன்படுத்தும் தெருவை மறித்து சுற்றுச் சுவர் அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜாபர்கான்பேட்டை திருநகரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய வட்ட வடிவ குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் 7 வட்ட வடிவ குடியிருப்புகள் கட்ட திட்டமிடப்பட்டு 4 மட்டுமே கட்டப்பட்டது. எஞ்சிய 3 வட்ட வடிவ குடியிருப்புகளை கட்ட வேண்டிய இடத்தில், தலா 5 தளங்கள் கொண்ட 4 குடியிருப்புகளை வாரியம் கட்டுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் குடி யிருப்புக்கு சுற்றுச்சுவர் அமைக்க அளவீடு செய்யப் பட்டத. அதன்படி தற்போது பயன்பாட்டில் உள்ள சிமெண்ட் தெருவின் 4ல் 3 பகுதியை வளைத்து சுவர் அமைக்க உள்ளனர். இதனால் தெருவின் அக லம் 3 அடியாக சுருங்கி விடும். ஆகவே, சுற்றுச் சுவர் அமைக்க வட்ட வடிவ இல்லம் குடி யிருப்போர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து குடியிருப்  போர் நலச்சங்க நிர்வாகிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி தலைமையில், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமியை சந்தித்து முறையிட்டனர். அப்போது சுற்றுச்சுவர் அமைப்பதை மறுபரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பொதுப்  பாதையில் சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து ஞாயிறன்று (மே 22) குடியிருப்போர் நலச் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ஆதரித்து பேசிய மார்க்சிஸ்ட் கட்சி யின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல் முருகன், “சட்டத்திற்கு புறம்பாக சாலையை ஆக்கிரமித்து சுவர் கட்டு வதை ஏற்க முடியாது. இந்த பிரச்சனையை தீர்க்க சட்டமன்ற உறுப்பினரும், மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இந்தப்போராட்டத்தில் கட்சியின் விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;