சென்ட்ரல் பாலிடெக்னிக் (சிபிடி) கல்லூரியில் பழுதடைந்த சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் காயமடைந்தனர். இதனையடுத்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக புதனன்று (மார்ச் 1) கல்லூரி முதல்வர் சீனிவாசனை சந்தித்து, சங்கத்தின் தென் சென்னை மாவட்டத் தலைவர் ஆனந்த், செயலாளர் ரா.பாரதி, நிர்வாகிகள் சுவேதா, கமலேஷ் உள்ளிட்டோர் மனு அளித்து பேசினர்.