districts

img

சிஐடியு சங்கம் அமைத்ததால் ஆத்திரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிறுவனம்

திருப்போரூர், செப் 8- தொழிற்சங்கம் அமைத்து கோரிக்கை வைத்த காரணத்திற்காக பணியிடை நீக்கம் செய்த குளோபல் பார்மா ஆலை  நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு சார்பில் ஊர்வலம்,  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. செங்கல்பட்டு மாவட்டம்,  திருப்போரூர் அடுத்த ஆலத்தூரில் சிட்கோ மருந்து தொழிற்பேட்டை செயல்பட்டு வருகிறது. இந்த தொழில் பேட்டையில் உயிர் காக்கும் மருந்துகள், குளுக்கோஸ் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டு வருகின் றன. இத்தொழிற்பேட்டை யில் இயங்கிவரும் குளோ பல் பார்மா மருந்து தொழிற் சாலையில் சங்கம் அமைத்து சம்பள உயர்வு,  போனஸ் உள்ளிட்ட சில  அடிப்படை கோரிக்கை களை  முன்வைத்த தொழி லாளர்களை நிர்வாகம் பணி நீக்கம், பணியிட மாற்றம் செய்து சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறது. இதேபோன்று யூரோ லைஃப்  நிறுவனத்தில் மூன்று  மாதங்களாக சம்பளம்,  4 ஆண்டுகளாக சம்பள உயர்வு,  தர மறுப்பது என  நிர்வாகம் அராஜக செய லிலும் ஈடுபட்டு வருகிறது. இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தொழி லாளர் நலத்துறை உடனடி யாக தலையிட வலியுறுத்தி  சிஐடியு  சங்க நிர்வாகி  மணிகண்டன் தலைமையில்  ஆலத்தூர் தொழிற்பேட்டை யில் புதனன்று (செப் 7) போராட்டம்  நடைபெற்றது. கோரிக்கைகளை விலக்கி சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி மாவட்ட செயலாளர் க.பகத்சிங் தாஸ் உள்ளிட்ட பலர் பேசி னர். முன்னதாக தொழிற் பேட்டையில் ஒரு பகுதியில் இருந்து நுழைவாயில் வரை முழக்கங்கள் எழுப்பியப்படி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றனர்.

;