தாம்பரம், பிப். 1 காவல்நிலையங்க ளுககு புகார் அளிக்க வரும் பொதுமக்களை அலை கழித்தால் காவல்நிலை யத்தில் உள்ள அனைவரும் இடமாற்றம் செய்யப்படு வார்கள் என்று தாம்பரம் நகர காவல் ஆணையர் ரவி எச்சரித்துள்ளர். தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் பொது மக்கள் புகார் அளிக்க வந்தால் உடனடியாக புகார் களை பெற்று உரிய ரசீது வழங்க வேண்டும். அதுபோன்று செயல்படா மல் பொது மக்களை அலைக் கழித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும். காவல் நிலையத்தில் உள்ள அனைவரையும் கூண்டோடு மாற்றிவிடுவேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர் பாக அவர் பேசியுள்ள ஆடி யோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது, அதில் பள்ளிக்கரணை யில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறீர்கள். இதுபோன்று தொடர்ந்து செயல்பட்டால் அனைவரையும் கூண்டோடு மாற்றிவிடுவேன். சைபர் கிரைம் தொடர்பாக புகார் வந்தாலும் அதற்கும் சி.எஸ்.ஆர். ரசீது வழங்க வேண்டும். தலைமை யகத்துக்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்து பொது மக்களை அலைக் கழிக்கக் கூடாது. ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித் துள்ளார்.