ஆரணி, மே 13-
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே குன்னத் தூர் ஊராட்சிக்குட்பட்ட அகஸ்தியபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சிவக்குமார். இவரது மகள் வைஷ்ணவி (8). அதே கிராமத்தில் அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வைஷ்ணவி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக வைஷ்ணவி உடலில் தீபற்றியது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்ததனர். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை சிறுமி இறந்தார். இது குறித்து ஆரணி தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.