districts

மதிய உணவு திட்டத்தால் தமிழகம் எழுத்தறிவு அதிகமுள்ள மாநிலமாக திகழ்கிறது யுனிசெஃப் இந்தியா தலைவர் பாராட்டு

சென்னை, மார்ச் 14 - மதிய உணவு உள்ளிட்ட திட்டத் தால் தமிழகம் எழுத்தறிவு அதிக முள்ள மாநிலமாக திகழ்கிறது என்று யூனிசெஃப் இந்தியா தலைவர் ஹூ`யூம் `ஹி பான் தெரிவித்துள்ளார். சென்னையில் திங்களன்று (மார்ச் 14) செய்தியாளர்களிடம் அவர் பேசிய தாவது: குழந்தை உரிமைகளைப் பாதுகாப்பதில் சமூக நலத்துறை, நீதித்துறை, காவல் துறை ஆகிய வற்றின் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப் பும் தேவைப்படுகின்றன.  இதற்கான  முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படும். குழந்தைகள் பாதுகாப்புக்கு பள்ளிக் கல்வித் துறையின் ஈடுபாடும் தேவைப்படுகிறது. மதிய உணவுத் திட்டம் போன்ற வற்றால் தமிழ்நாடு எழுத்தறிவு அதிகம் உள்ள மாநிலமாக திகழ்கிறது. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கும் திட்டங்கள் யுனிசெஃப் உதவியுடன் கல்வித்துறையால் செயல்படுத்தப்படுகின்றன. கோவிட் பெருந்தொற்று குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதனை சரிசெய்ய இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தனித்துவமான ஏற்பாடுகளை செய்வது அவசியமா கும். இல்லையென்றால் குழந்தைகள் இடையே பெரிய அளவில் இடை வெளி வரக்கூடும் . கொரோனா தடுப்பூசி செலுத்துவ தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல் பட்டுள்ளது. மாநிலத்தில் 90 விழுக்காடு  பேருக்கு முதல் தவணையும், 80 விழுக்காடு பேருக்கு 2-ம் தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் 14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 70 விழுக்காடு  பேருக்கு தடுப்பூசி செலுத்தி யிருப்பது சிறப்பம்சமாகும். இவர்கள் பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களாக இருப்பதால் அச்சமின்றி பயில்வதற்கு உதவும் இவ்வாறு அவர் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பில், சமூகக் கொள்கைக்கான திட்டத்தின் தமிழ்நாடு, கேரளா யுனிசெஃப் அலுவலக தலைவர் கே.எல்.ராவ்,  கௌசிக் கங்குலி, சென்னை பத்திரிகை  தகவல் அலுவலக மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல்  தலைமை இயக்குநர் எம்.அண்ணா துரை ஆகியோர் உடனிருந்தனர்.

;