districts

தாம்பரம் - வேளச்சேரி இலகுரக ரயில் பாதை திட்டம் நிறுத்தம்

சென்னை, ஜூன் 8-  தாம்பரம் முதல் வேளச்சேரி இடையே இலகுரக ரயில் பாதை அமைக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மாநில அரசு, பெருநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கு  அடிப்படையிலான போக்குவரத்து முறையை விரிவுபடுத்தும் திட்டத்தில், முதலில் சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட பணிகள் 45 கி.மீ தூரத்தில் மேற்கொள்ளப்பட்டு பின்னர் 10 கி.மீ விரிவு படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்தின்படி, 2025ம் ஆண்டுக்குள் பூந்தமல்லி மற்றும் பவர் ஹவுஸ் இடையே ஆரம்ப செயல்பாடுகளை தொடங்கும் நோக்கில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் நகரின் பல இடங்களில் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் மற்றும் தாம்பரம் முதல் வேளச்சேரி வரை தெற்கு நோக்கி இரண்டு வழிகளில் விரிவாக்கம் செய்யும் முதற்கட்ட ஆய்வுப் பணிகளை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டது. தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான பாதையைப் பொறுத்தவரை சாத்தியக்கூறு அறிக்கை முடிந்துவிட்டது. ஆனால் தாம்பரம் முதல் வேளச்சேரி வரையிலான பெரும்பாலான பகுதிகள் இரண்டாம் கட்ட திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.  அல்லது விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டத்திலும் இடம்பெறவுள்ளன. எனவே ஒரு புதிய இலகுரக ரயில் தேவையா என்று  யோசனை எழுந்துள்ளது. எனவே தற்போதைக்கு  இந்த பணியை நிறுத்தி வைப்பதாகவும் அவர்கள் கூறினர்.

;