districts

img

மாணவர்கள் தற்காலிக நீக்கம்: எம்சிசி கல்லூரி முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, பிப். 9 - மாணவர்களின் தற்காலிக நீக்கத்தை ரத்து செய்யக் கோரி வியாழனன்று (பிப். 9) எம்சிசி கல்லூரி முன்பு மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தாம்பரத்தில் மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் (எம்சிசி) அமல் படுத்தப்பட்டுள்ள நடத்தை விதிகளை ஆட்சேபித்த முதுகலை முதலாமாண்டு மாணவர் விவேகானந்தன், மாணவி கீர்த்தனா ஆகியோரை நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது. இந்நிலையில், மாணவர்களின் தற்காலிக நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், புதிய நடத்தை விதிகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலி யுறுத்தி கல்லூரி அருகே இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் அரவிந்த்சாமி கூறுகையில், சகோதரத்துவத்துடனும், தோழமையுடன் மாணவர்கள் பழகுவதை, நடத்தை விதி என்ற பெயரால் கல்லூரி நிர்வாகம் தடுக்கிறது. மாணவர்களை தற்காலிக நீக்கம் செய்கிறது. ஒரு மாண வரை கல்வியாண்டு முழுமைக்கும் தற்காலிக நீக்கம் செய்துள்ளது. இது ஏற்புடையதல்ல. மாணவர்களை அழைத்து பேசி, கல்வி பாதிக்காத வகையில் பிரச்ச னைக்கு தீர்வு காண வேண்டும் என்றார். மாடுகளை கட்டி பிடிப்போம் என்பன போன்ற பாஜக-வின் பிற்போக்கு தனத்தோடு எம்சிசி கல்லூரி நிர்வாகம் போட்டி போடுகிறது. மாணவர்களுடன் கலந்து பேசி நடத்தை விதிகளை உரு வாக்க வேண்டும் என்ற யுஜிசி விதிகளுக்கு மாறாக, நிர்வாகம் செயல்படுகிறது. இந்த பிரச்சனையில் உயர் கல்வித்துறை தலையிட வேண்டும் என்றும் அவர் கூறினார். சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஆனந்த் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் ரா.பாரதி உள்ளிட்டோர் பேசினர்.

;