districts

நிர்பயா திட்டத்தின் கீழ் தெரு விளக்குகள் அமைப்பு

சென்னை, செப். 6 - சென்னையில் நிர்பயா நிதியிலி ருந்து புதிதாக 5 ஆயிரத்து 594 புதிய தெருவிளக்குகள் அமைக்கப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி மின்துறை 2 லட்சத்து 91 ஆயிரத்து 415  எல்இடி தெரு விளக்குகளை பரா மரித்து வருகிறது. இதன் தொடர்ச்சி யாக விரிவாக்கப்பட்ட மாநகராட்சி பகுதிகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் புதிய மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதன்படி, விரிவாக்கம் செய்யப் பட்ட பகுதிகளில் விடுபட்ட இடங்கள், காவல்துறை பரிந்துரைத்துள்ள இடங்கள், மாநகரப் பகுதிகளில் போதிய வெளிச்சம் இல்லாத பகுதி களில் மின்விளக்கு அமைக்கப்பட உள்ளது. இதன்படி 33.57 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரத்து 594 புதிய தெரு விளக்குகள், 85 உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான ஒப்பங்கள் இறுதி செய்யப்பட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன.   திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் 4.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 104 எல்இடி விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. காவல்துறை அறிவு றுத்திய இடங்களில் 6 கோடி ரூபாய் செலவில், 696 எல்இடி தெரு  விளக்குகளும், 49 உயர்கோபுர மின் விளக்குகளும் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. பொதுமக்களின் கோரிய இடங்க ளில் 22.73 கோடி ரூபாய் செலவில் 3 ஆயிரத்து 794 எல்இடி தெரு விளக்கு களும், 36 உயர் கோபுர விளக்குகளும் அமைக்கும் பணி தொங்கி உள்ளது. இதுதவிர்த்து, துருப்பிடித்த, உயரம் குறைவான 2 ஆயிரம் தெரு விளக்கு மின்கம்பங்கள்  7.53 கோடி ரூபாய் செலவில் புதியதாக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

;