districts

img

மலை கிராம மக்கள் மறியல்

வாணியம்பாடி, பிப். 18- ஜவ்வாது மலையை சுற்றி ஆர்.எம்.எஸ். புதூர், காவலூர், சத்திரம், உமைய நாயக்கனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மாண வர்கள் ஆலங்காயம், வாணியம்பாடி யில் அமைந்துள்ள பள்ளி, கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்றால், மலைப்பாதை வழியாக வரும் அரசு பேருந்தில் தான் செல்ல வேண்டும். ஆனால் அவ்வழியே வரும் அரசு பேருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வது இல்லை. இத னால் பள்ளி, கல்லூரி செல்லும் மாண வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இத னால் கோபமுற்ற அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் ஆலங்காயம் ஜமுனாமுத்தூர் சாலையில் வெள்ளியன்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலூர் காவல் துறையினரும், வாணியம் பாடி வருவாய்த் துறையினரும் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தனர். இதையடுத்து அனைவரும் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.