தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில மாநாடு ஓசூர் பிஎம்சி டெக்கில் நடைபெற்றது. இதில் எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் மாற்றம் முன்னேற்றம் எனும் தலைப்பில் அறிவியல் குறித்து உரை வீச்சு நிகழ்த்தினார். மாநிலத் தலைவர் எஸ்.தினகரன், பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி, மாநில செயலாளர் சேதுராமன்,அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆஷா மிஸ்ரா,வணங்காமுடி, ஆடிட்டர் பாலசுந்தரம், செயற்குழு உறுப்பினர் சிவகுமார் இணைச் செயலாளர் பாரதிதாசன், மாவட்டத் தலைவர் சாந்தி, வட்டத் தலைவர் சண்முகம், நீலகண்டன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.