பயன்பாட்டுக்கு வராத அங்கன்வாடி மையம்
ஆர்.கே.பேட்டை, அக்.10- திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், தாமனேரி கிராமத் தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்ற னர். அந்த, அங்கன்வாடி மையம் சேத மடைந்ததால் பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23ம் நிதியாண்டில் ரூ.13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப் பட்டது. இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும், இதுவரை திறந்து வைக்கப் படவில்லை. எனவே, கடந்த ஓராண்டாக திறக்கப்படாமல் உள்ள அங்கன்வாடி மையத்தினை உடனடியாக குழந்தைகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேம் அழைப்பு தடுப்பு வசதி
சென்னை, அக்.10- ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஸ்பேம் அழைப்பு தடுப்பு வசதியால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான வாடிக்கை யாளர்கள் பயனடைந்துள்ளனர் என்று அந்நிறுவனத்தின் தமிழ்நாடு தலைமைச் செயல் அதிகாரி தருண் விர்மாணி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்றைய டிஜிட்டல் உலகில் போலியான அழைப்புகளும் சந்தேகத்திற்குரிய உரைகளும் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் கவலைதரும் விஷயமாக உள்ளன. இதற்குத் தீர்வுகாண தங்குதடை இல்லாமல் இயங்கும் ஒருங்கிணைக்கப்பட்ட நவீன செயற்கை நுண்ணறிவு ஆற்றல்பெற்ற ஒரு தீர்வை ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள் ளது. அனைத்து சாதனங்களிலும் ஏர்டெல் வாடிக்கையாளர் களுக்கு ஆட்டோமேட்டிக் ஆக்டிவேஷனுடன் கட்டண மில்லாமலேயே இதற்கான தீர்வு கிடைக்கும் என்று அவர் கூறினார். இந்த வசதி தொடங்கப்பட்ட 12 நாட்களில் இந்த முன்னோடி தொலைத்தொடர்பு தீர்வு தமிழ்நாட்டில் 112 மில்லியன் ஸ்பேம் அழைப்புகளையும் 3 மில்லியன் ஸ்பேம் SMS செய்திகளையும் வெற்றிகரமாகக் கண்டறிந்து தடுத்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
எபிலிட்டி விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை,அக்.10- மாற்றுத்திறனாளிகள் சாதனையாளர்களின் விடா முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், கவின்கேர் மற்றும் எபிலிட்டி ஃபவுண்டேஷன் ஒருங்கிணைந்து நடத்தும் 23வதுகவின்கேர்எபிலிட்டிவிருதுகள் 2025க் கானபரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்கு பரிந்துரை செய்வதற்கான கடைசிதேதி நவம்பர் 8 ஆம் தேதியாகும். ஆன்லைன் மூலம் பரிந்துரைக்க www.abilityfoundation.org அல்லது www.cavinkare.com இணையத்தளங்களை அணுகலாம். ஊனம் இருந்த போதிலும் தங்களது கனவுகளை தைரிய மாக சாதித்த தனிநபர்களின் சாதனைகளை கவின்கேர் எபிலிட்டி விருதுகள் அங்கீகரித்து கவுரவிக்கின்றன. அனுபவ முமிக்க நடுவர்கள் குழுவால் விருதுபெறும் சாதனை யாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
உணர்வுபூர்வமான விளம்பரம் விவோ வெளியீடு
சென்னை, அக்.10- தீபாவளி என்பது ஒற்றுமை, அன்பு மற்றும் பாசத்தை வெளிப்படுத்தும் பண்டிகையாகும். வீடுகள் வண்ண விளக்கு களால் மட்டுமல்ல, ஒரே இடத்தில் அனைவரையும் மீண்டும் ஒன்றிணைக்கும் குடும்பங்களின் புன்னகை யால் ஒளிரும் நேரம் இது. இருப்பினும், இன்றைய பரபரப்பான உலகில், அவர வர் பிள்ளைகள் பெரும்பா லும் வீட்டை விட்டு வெகு தொலைவில் வாழ்கின்ற னர், இந்த பொன்னான தருணங்களில் அவர்களை நேரில் பார்க்க பெற்றோர்கள் ஏங்குகிறார்கள். தங்களின் வருகைதான் பெற்றோரின் தீபாவளியை உண்மையி லேயே சிறப்பானதாக்குகி றது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். இது குறித்து உணர்வுப்பூர்வமான விளம்பரத்தை உலகளாவிய ஸ்மார்ட்போன் பிராண்டான விவோ, வெளியிட்டுள்ளது. ‘தி ஸ்பிரிட் ஆப் ஹோம்க மிங்,’ என்னும் இதயப்பூர்வ மான புதிய தீபாவளி விளம்ப ரம் யூடியூப் மற்றும் மெட்டா வில் வைரலாகி வருகிறது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ.8.80 கோடியில் அதிநவீன உபகரணங்கள்
சென்னை,அக்.10- சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.8.80 கோடி மதிப்பீட்டில் தீக்காய பிரிவில் அதி நவீன மருத்துவ உபகரணங் களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பின்னர், செய்தியாளர்க ளிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இந்தியாவில் தீக்காய சிகிச்சைக்கான 2-வது பெரிய மருத்துவ மனையாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனை உள்ளது. இம்மருத் துவமனையில் 1973-ம் ஆண்டு 2 படுக்கைகளுடன் தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்து தற்போது 75 படுக்கை வசதிகளுடன் கூடிய தீக்காய சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்படுகிறது.மருத்துவமனையின் தீக்காய சிகிச்சை மையத் தில் கூடுதல் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.8.80 கோடி மதிப்பீட்டில் பல்வேறு தீக்காய பிரிவு உபகரணங்கள் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் வாங்கப்பட்டு பயன்பாட் டிற்கு கொண்டு வரப்பட் டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் ரூ.358.87 கோடி மதிப் பீட்டில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி ஆதாரத்துடன் 6 தளங் களை கொண்ட 2,68,815 சதுர அடி பரப்பில், 441 படுக்கைகள், 12 அறுவை அரங்கங்கள், ஒரு அறுவை அரங்கம் போன்ற வசதி களுடன் கூடிய ஒரு டவர் பிளாக் கட்டிடம் ஒன்று கட்டும் பணி நிறைவடை யும் நிலையில் உள்ளது என்றார். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தேசிய நலவாழ்வு குழும இயக்கு நர் ஷில்பா பிரபாகர் சதிஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணம்
உயர்த்த நிர்ணய குழு மறுப்பு மருத்துவ கல்வி மாணவர்களின் கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், நூலக கட்டணத்தை ஆண்டுதோறும் கட்டண நிர்ணய குழுதான் நிர்ணயிக்கும். இந்த ஆண்டு கூட தனியார் கல்லூரிகளை சேர்ந்தவர்கள் கட்டணத்தை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். ஆனால், கட்டண நிர்ணய குழு, இந்த ஆண்டு உயர்த்த முடியாது. ஏற்கெனவே இருக்கும் கட்டணம் போதுமானது என்று தெரிவித்துவிட்டனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் விடுதி கட்டணம், பேருந்து கட்டணத்தை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றார் அமைச்சர். இந்நிலையில், தனியார் மருத்துவ கல்லூரிகள் கூடுதலாக ரூ.3.5 லட்சம் வரை கட்டணம் வசூலித்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக புகார்கள் வந்தால் கட்டண நிர்ணய குழுவுக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
சிபிஎம் கிளை மாநாடுகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட, கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட செயலாளர்கள் விவரம்
சோழிங்கநல்லூர் பகுதி
பெருங்குடி - எம்.தேவபிரகாஷ்
பெரும்பாக்கம் - கே.குணசேகரன்
நீலாங்கரை - எஸ்.வினோத்குமார்
மடிப்பாக்கம் - எஸ் பாமா
கண்ணகி நகர் - வி.கல்யாணசுந்தரம்
பள்ளிக்கரணை - பி.ரமேஷ்
பர்மா காலனி - எ.முனியப்பன்
ஈஞ்சம்பாக்கம் - கே.ஏ.ராஜசிம்மன்
திருவள்ளூர் நகர் - எம்.புவனேஸ்வரி
காரப்பாக்கம் - ஜி. பானுப்பிரியா
செம்மஞ்சேரி - சி.வெள்ளைக்கண்ணு
கல்லுகுட்டை - ஐ.சரத்குமார்
ஜல்லடையான்பேட்டை - ஏ.கங்காதரன்
சித்தாலப்பாக்கம் - டி. மோகனா
மயிலாப்பூர் பகுதி
விசாலாட்சி தோட்டம் - ஆர்.ரமேஷ்
ஆழ்வார்பேட்டை - என்.நித்தியானந்தம்
பல்லக்கு மாநகர் - கே.மாரிமுத்து
விவேகானந்தபுரம் - கே.பாலகிருஷ்ணன்
மயிலாப்பூர் - எ.ஜோசப் பிரேம்நாத்
நொச்சிகுப்பம் - ஜெ. அன்புரோஸ்
ரோட்டரி நகர் - கே. விநாயகம்
மலர் ஏ - கே. கண்ணன்
மலர் பி - ஜோ. இம்மானுவேல்
171 வட்டம் ஏ - என்.ஜோதிபாசு
171 வட்டம் பி - எஸ்.நித்தியானந்தம்
171 வட்டம் (பெ) - எஸ். யசோதா
சிபிஎம் கிளை மாநாடுகள்
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதி குழுவில் நடைபெற்ற கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட கிளை செயலாளர்கள் விவரம்
நெல்லிக்குப்பம்
கிளை 1 - ஆர்.வி.எஸ்.தணிகைச் செல்வம்
நெல்லிக்குப்பம் 2 - ஆர்.பிரேம் தாஸ்
அண்ணா நகர் 7வது வார்டு - மகேஷ்
அண்ணா நகர் 20வது வார்டு - ஜி.இன்பரசு
திருக்கண்டீஸ்வரம் - ரவிச்சந்திரன்
மாளிகை மேடு - எப்.ஜென்ம ராகினி
சாத்திப்பட்டு - முத்துக்குமரன்.
பி.என்.பாளையம் 1 - ஜி.அருண்.
பி.என்.பாளையம் - விக்னேஸ்வரன்
சித்தரசூர் 1 - ஆர்.வெங்கடேசன்
சித்தரசூர் 2 - மணிவேல்
சித்தர்சூர் (பெண்) - சிவப்பிரஷணம்
பாலூர் பெரிய காலனி - அழகானந்தம்
பாலூர் - கலர் காலனி சந்தோஷ்
கொங்கராயனூர் - மோகன்
நெய்வேலி ஏரியா கமிட்டி
நெய்வேலி ஏரியா முருகன் தெரு கிளை - ஏ.ராணி
பூம்புகார் தெரு - ஏ.வெண்ணிலா
எம்.கே.சி கிளை - பி.பெரியசாமி
என்.எஸ்.யூ கிளை - எஸ்.சம்பத்குமார்
புது தெரு - மின்னல் கொடி
மையின்ஸ் 1ஏ (ஓய்வு) - எல்.நாராயணன்
மையின்ஸ் 1ஏ கான்ட்ராக்ட் - ஏ.அன்பழகன்
ஆர்ச் கேட் வடக்கு - நாகலிங்கம்
ஆர்ச் கேட் தெற்கு - சுப்பிரமணியன்
ஆர்ச் கேட் கிழக்கு - மணி
மையின்ஸ் -2 கான்ட்ராக்ட் - தினேஷ்
மையின்ஸ் 2 கான்ட்ராக்ட் - ஆனந்தி
மையின்ஸ் 2 கான்ட்ராக்ட் - பழனிசாமி
தர்மல்கிளை : சுபாஷ்
தர்மல் 2 கான்ட்ராக்ட் - கே.மூர்த்தி
தர்மல் 2 விரிவாக்கம் கான்ட்ராக்ட் - பி.சுரேஷ்
வட்டம் 30 புது மாரியம்மன் தெரு - ஏ.இந்தராணி
வட்டம் 30, மாரியம்மன் தெரு - சின்னம்மா
சுரங்கம் 1 : பி.பேரின்பம்
கட்டுமான கிளை (எம்கேசி) - கே.மூர்த்தி
பி-2 பிளாக் - எஸ்.விமலா
வட்டம் 30 - கே. காளியம்மாள்
டி.ஏ & ஜி.எச் - என்.ரமேஷ்
சுரங்கம் 2 - ஆர்.வெள்ளியங்கிரி
டெக்னிக்கல் - எம்.ராஜகோபால்
வட்டம் 30 - இ.மரியதாஸ்
பள்ளிவாசல் தெரு - இ.ரத்னா
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகளில் தேர்வு செய்யப்பட்ட செயலாளர்கள் விவரம்
சங்கராபுரம் ஒன்றியம்
சங்கராபுரம் நகரம் - அந்தோணி
கொசப்பாடி (1) - இ.சாமிகண்ணு
கொசப்பாடி (2) - பி.ராமர்
கொசப்பாடி (3) - செ.சின்னதுரை
செல்லம்பட்டு - எஸ்.கோவிந்தன்
அரசம்பட்டு (1) - எம்.ராஜேந்திரன்
அரசம்பட்டு (2) - என்.மூர்த்தி
பூட்டை - அய்யனார்
செம்பராம்பட்டு - எஸ்.சர்க்கரை
தேவபாண்டலம் - எம்.முருகேசன்
மூக்கனூர் - கே.ஏழுமலை
ரங்கப்பனூர் - ஆர்.கார்மேகம்
மூலக்காடு - கே.பூட்சி
கள்ளிப்பட்டு (பெண்) -ஆர்.கோவிந்தம்மாள்
கள்ளிப்பட்டு (ஆண்) - பி.சங்கர்
மல்லாபுரம் - செல்லமுத்து
பாவலம் - கே.முனுசாமி