சென்னை,அக்.27- முன்னணி வங்கி சாரா நிதி நிறுவன மான சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட், சென்னையில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பளிக்க மணிப்பால் குளோபல் ஸ்கில்ஸ் அகாடமியுடன் இணைந்துள்ளது. பி.எஃப் .எஸ்.ஐ தொழில்நுட்பம் சார்ந்த வேலைக்கு தேவைப்படும் திறன்களுக்கான பயிற்சி திட்டம் நவம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. விண்ணப்பதாரர்கள் சுந்தரம் ஃபைனான்ஸின் ஒரு பிரிவான சுந்தரம் இன்ஃபோடெக் சொல்யூஷன்ஸில் மென்பொருள் பொறியாளராக வேலையை தொடங்குவர். BCA, BSc. Computer Scidnce, BSc. Math & IT, M.Sc. I.T, BE, B Tech, and MCA ஆகிய படிப்பு படித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு full-stack development, testing tools, coding and other engineering practices and tools, backend/middle/frontend track technologids, critical thinking, problem-solving and Capstone projects for real-time application ஆகியவற்றில் அடிப்படை பயிற்சி அளிக்கப்படும். சென்னையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கற்று கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மென்பொருள் பொறியாளர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று சுந்தரம் ஃபைனான்ஸ் தலைமை தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அதிகாரி சுதீர் வாரியர் தெரிவித்துள்ளார். விண்ணப்பத்திற்கான தகுதி குறைந்த பட்சம் 60விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இது (2019-22). பட்டதாரிகளுக்கானது ஆகும். மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க, https://placements.manipalskills.com/sundsoft.html பார்வையிடவும்.