districts

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

சென்னை, செப். 15- சென்னை வண்ணாரப்பேட்டையில், 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், காவல்துறை ஆய்வாளர் உட்பட 21 பேர் குற்றவாளிகள் என சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பளித்துள்ளார். அதற்கான தண்டனை விவரத்தை செப்டம்பர் 19ஆம் தேதி அறிவிப்பதாக தெரி வித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயதுச் சிறுமியை பாலியல் தொழி லில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சிறுமியின் உறவினர் சாய்தா பானு, உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புக ழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தி யாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் அஜி (எ) வெங்கட்ராமன், திருபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல் துறை யினர் 22 பேரை கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 26 பேரில், 2 பெண்கள் உட்பட 4 பேர் தலைமறைவாகி விட்டனர். மீத முள்ள 22 பேரில் மாரீஸ்வரன் என்பவர் விசா ரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இறந்து விட்டார். மீதமுள்ள 21 பேர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சென்னை மாவட்ட போக்சோ சிறப்பு நீதி மன்றம் விசாரணை நடத்தியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ லட்சுமி, குற்றம்சாட்டப்பட்ட ஆய்வாளர் புகழேந்தி உள்ளிட்ட 21 பேரும் குற்றவாளி கள் என தீர்ப்பளித்த நீதிபதி, இவர்களுக் கான தண்டனை விவரத்தை செப்டம்பர் 19 அன்று அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

;