districts

img

குடியிருப்புகளை சூழ்ந்த கழிவுநீர்

அம்பத்தூர், டிச. 1- சென்னை மாநகராட்சி மண்டலம் 7 க்கு உட்பட்ட 86ஆவது வார்டில் ஐசிஎப் காலனி, கே.கே.நகர், அத்திப்பட்டு கலைவாணர் நகர், பாரதிதாசன் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பேஸ் 2, 3 ஆகிய பகுதிகள் உள்ளன.  அம்பத்தூர் அம்பேத்கர் சிலையில் இருந்து வான கரம் செல்லும் சாலையில் அத்திப்பட்டு கலைவாணர் நகர் அருகே குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு அம்பத்தூர் மண்டலத்தி ற்குட்பட்ட 15 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்ட ப்பட்டு வந்தது. பொதுமக் ்களின் நீண்ட போராட்டத்தை தொடர்ந்து, இங்கு குப்பைகளை கொண்டு வந்து கொட்டிவிட்டு,பின்னர் இங்கிருந்து கொடுங்கையூர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு தற்போது எடுத்துச் செல்லப்படுகிறது. ஏற்கனவே மலைபோல் குவிந்துள்ள குப்பை கிடங்கை அகற்றுவோம் என அதிகாரிகள் பலமுறை கூறினாலும் இதுவரை அகற்றப்படவில்லை.

இதனால் மழைக்கா லங்களில் அதில் இருந்து பூமிக்கு செல்லும் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது பெய்த மழையில் அதில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த குப்பைக் கழிவு நீர் அருகில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பேஸ் 2, 3இல் உள்ள குடியிருப்பு பகுதியில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகிறது. அந்த தண்ணீரில் நடந்து சென்றால் கால்களில் அரிப்பு ஏற்படுவதாகவும், மேலும் பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ள தாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தற்போது டெங்கு உள்ளிட்ட பல்வேறு வைரஸ் காய்ச்சல் ஏற்படும் நிலையில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்தவும், முறையாக  வடிகால்வாய் அமைத்து மழை நீர் தேங்காமல் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;