கிருஷ்ணகிரி, பிப். 23- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கலைஞர் நகர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தின் கழிவு நீர் வெளியேற முறையான கால்வாய், தொட்டி வசதி எதுவும் செய்யவில்லை. இதனால், பல ஆண்டுகளாக கழிவுநீர் தெருவில் ஆறாக ஓடுகிறது. பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பொது மக்கள் அனைவரும் அந்த வழி யாக செல்லும்போது மூக்கை பிடித்துக் கொண்டுதான் செல்லவேண்டிய அவலம் தொடர்கிறது. இதுகுறித்து மண்டப உரிமையாளர், வட்டார வளர்ச்சி அதிகாரி, வட்ட சுகா தார அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால், வட்டாட்சியர் உடன டியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காலம் தாழ்த்தினால் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என கலைஞர் நகர் மக்களும், சமூக ஆர்வலர்களும் எச்சரித்துள்ளனர்.