districts

img

விஸ்வகர்மா தினத்தை எதிர்த்து வீடுவீடாக பிரச்சாரம் செய்ய வேண்டும்

சென்னை, மே 2 - தொழிலாளி வர்க்கத்தை  பிளவுபடுத்தும் விஸ்வகர்மா  தினத்தை எதிர்த்து வீடு வீடாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று மூத்த தொழிற்சங்கத் தலைவர் டி.கே.ரங்கராஜன் கேட்டுக் கொண்டார்.  மத்திய சென்னை மாவட்டத்தில் சிஐடியு -  ஏஐடியுசி சார்பில் 138வது  மேதின பேரணி பொதுக் கூட்டம் நடைபெற்றது. யானைக் கவுனி காவல் நிலையம் அருகிலிருந்து தொடங்கிய பேரணி, ஏழுகிணறு பூங்கா அருகே  நிறைவடைந்தது. அங்கு  நடைபெற்ற பொதுக்கூட்டத் தில் டி.கே.ரங்கராஜன் பேசியதன் சுருக்கம் வரு மாறு: நவீன தாராளமய கொள்கை அமல்படுத்தப் பட்ட பிறகு தொழிலாளிகள் மாறியுள்ளனர். முறைசாரா தொழிலாளர்கள் அதிகரித்து வருகின்றனர். தொழிலாளி வர்க்கம் அனைத்து வகை யிலும் நவீன முறையில்  கடுமையாக தாக்கப்படு கிறது. இதனை எதிர்கொள்ள புதிய யுத்திகள் தேவை. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக 8 மணி நேரம் காலாவதியாகி வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி தொழிலாளர்களுக்கு கடும் பாதிப்புகளை, நோய்களை ஏற்படுத்தி வருகிறது. வர்க்கத்தை எதிர்த்து போராடுவோம் காங்கிரஸ் அரசை விட, பல மடங்கு வேகத்தில் பாஜக அரசு நவீன தாராள மயக் கொள்கையை அமல் படுத்துகிறது. மேலும், சாதிய, மதவாதத்தை ஊக்கு விக்கிறது. சாதியவாதமும் மதவாதமும் பெருமுதலாளி களுடன் இணைந்துள்ளது. பாபர் மசூதி இடித்தபோது டாடா உண்ணாவிரதம் இருந்தார். அதே டாடா, தற்போது ஆர்எஸ்எஸ் அலு வலகத்திற்கு செல்கிறார். அம்பானி, அதானி வியாபாரி கள். டாடா, பிர்லா தொழில்  முனைவோர். இந்த வியா பாரிகளின் கடைகளுக்குள் சங்கம் வைக்க முடிய வில்லை. எனவே, அந்த வர்க்கத்தை எதிர்த்து போராட, வலுவான தொழிற் சங்கம் தேவை. மே தினம் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்கிறது. ஆர்எஸ்எஸ், பாஜக இதை  ஏற்க மறுத்து செப்டம்பர் மாதத்தில் விஸ்வகர்மா தினத்தை கொண்டாடுகிறது. விஸ்வகர்மா தினம் இந்துத்துவா பாசிச அணுகு முறை கொண்டது. அதில் இந்துக்கள் மட்டும்தான் பங்கேற்க முடியும். விஸ்வ கர்மா தினம் தொழிலாளி  வர்க்கத்தை பிளவுபடுத்து கிறது. மதவாதமும் சாதிய வாதமும் விஸ்வகர்மா தினத்தை வலுப்படுத்து கின்றன. இதை எதிர்த்து தேர்தலில் வாக்கு சேகரிப் பதை போன்று வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும். சாதிய, மதவாதத்தை  எதிர்த்து, பெருமுதலாளி களின் ஆதரவை எதிர்த்து கூட்டணியை உருவாக்கி, தொழிலாளி வர்க்கம் தலைமையேற்கும் போது தான் மாற்றம் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார். சிஐடியு மாவட்டத் தலை வர் எம்.தயாளன் தலைமை யில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஏஐடியுசி  தலைவர்கள் சி.எச்.வெங்கடாசலம், மாவட்டச் செயலாளர் மு.சம்பத், பியூலாஜான் செல்வராஜ், எஸ்.எஸ்.சரவணன், மு.வர தன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, டி.நரேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். காம்ரேட் கேங்ஸ்டா குழுவினரின் ராப்  இசை நிகழ்ச்சி நடை பெற்றது.

உயர்ந்த விலைவாசி! உயராத ஊதியம்!!
5 ஆண்டுகளில் உணவு பொருட்களின் விலை 71 விழுக்காடு உயர்ந்துள்ள நிலையில், ஊதியம் 37  விழுக்காடுதான் உயர்ந்துள்ளது. இந்த வித்தியாசம் மனிதனின் வாழ்க்கை தரத்தை பாதிக்கிறது. வேலைகளில் நிரந்தரத் தன்மை கிடையாது? தொழி லாளர்களில் புதிய ஓய்வூதியம், பழைய ஓய்வூதியம், தொகுப்பூதியம் பெறுவோர் என உள்ளனர். வருமான வரித்துறையில் 18 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் கான்ட்ராக்ட் தொழிலாளர்கள் உள்ளனர். கான்ட்ராக்டர் 6 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொள்ள தொழிலாளிக்கு 12 ஆயிரம் ரூபாய்தான் கிடைக்கிறது. தூய்மை பணியாளரை விட குறைந்த  ஊதியத்தில் பணியாற்றும் நிலை உள்ளது. இத்தகைய சவாலை தொழிற்சங்கம் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

 

;