districts

img

கோவில் சொத்துக்களை அபகரிக்க மதவெறிக் கும்பல் முயற்சி சென்னை ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் எச்சரிக்கை

சென்னை, டிச.17- கோவில் சொத்துக்களை மத வெறிக் கும்பல் அபகரிக்க ஒருநாளும் அனுமதிக்கக் கூடாது என்று சென்னை ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் கூறினார். நியாய வாடகை நிர்ணயக்குழு பரிந்துரையை உடனடியாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கவன ஈர்ப்பு அரை நிர்வாண போராட்டம் சனிக்கிழமை (டிச. 17) நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பேசுகையில், ‘‘கோயில்களும், அதன் சொத்துக் களும் அரசின் கையில் இருக்கும் வரைதான் நாமெல்லாம் அங்கே குடியிருக்க முடியும்’’ என்றார். மதவெறி சக்திகள் கோயில்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராகவும் நாம் போராட முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்து சமய அறநிலையத்துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் களை தங்களிடம் ஒப்படையுங்கள் என்று மதவெறிக் கும்பல் கோரு வது சட்டவிரோதமானது, மக்கள் நலனுக்கு எதிரானது. மாநில அரசின் உரிமையில் அத்துமீறி தலை யிடுகிறார்கள். எனவே இதற்கெதிராக வலுவான குரலை எழுப்ப வேண்டும் என்றும் பெ.சண்முகம் கேட்டுக் கொண்டார். கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ஏக்கர் கணக்கில் இடங்களை கொடுங்கள் என்று கேட்கவில்லை. பல ஆண்டுகாலமாக குடியிருக்கும் 200 சதுர அடி, 400 சதுர அடி இடங்களைத்தான் கேட்கிறோம். இந்த நிலத்தில் குடியிருக்கும் எழை எளிய மக்களுக்கு வாடகையை உயர்த்தக்கூடாது என்றும் கோயி லுக்கு சொந்தமான இடத்தை இலவச மாக கேட்கவில்லை. அதற்கு ஒரு நியாயமான விலை நிர்ணயித்து தவணை முறையில் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு பட்டா கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

;