விருத்தாசலம், ஜன. 18- விருத்தாசலத்தில் உள்ள 33 வார்டுகளில் 94 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் தெருக் கள் மீண்டும் தகரங்களை கொண்டு அடைக்கப்படு கின்றன. விருத்தாசலத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நகராட்சி நிர்வாகம் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதது, முகக்கவ சம் அணியாமல் இருந்ததற் காக 2 வணிக நிறுவனங்க ளுக்கு தலா ரூ. 5 ஆயிரம், 14 கடைகளுக்கு தலா ரூ. 500, 17 தனிநபர்களுக்கு ரூ. 200 வீதம் அபராதம் விதிக்கப் பட்டது. விருத்தாசலத்தில் உள்ள 33 வார்டுகளில் 94 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் தெருக் கள் மீண்டும் தகரங்களை கொண்டு அடைக்கப்படு கிறது. விருத்தாசலம் நகராட் சிக்கு உட்பட்ட ஜங்ஷன் ரோடு, வி.என்.ஆர். நகர் செல்லும் வழி, ஆலடி ரோடு, தெற்கு பெரியார் நகர், டிரைவர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர். இதனால் நகராட்சி ஆணையாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் உத்தரவின்பேரில் அந்த பகுதிகளுக்கு செல்லும் பாதை அனைத்தும் தகரத் தால் அடைக்கப்பட்டு வெளிநபர்கள் யாரும் அந்த பகுதிகளுக்குள் செல்ல முடியாதபடி தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதி களில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பால சந்தர், சுகாதார ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.