districts

img

ரப்பர் ஆலையில் தீ விபத்து: ரூ.50 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்

திருவள்ளூர், ஜூன் 18- கும்மிடிப்பூண்டி அருகே ரப்பர் தொழிற் சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாச மானது, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண் டியை அடுத்த தேர்வாய் கண்டிகையில் சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில் தனி யார் ரப்பர் தொழிற்சாலை இயங்கி வருகிறது.  இங்கு காலாவதியான பழைய வாகன  டயர்கைகளை உரித்து அதனை இயந்தி ரங்கள் மூலம் சிறு துண்டுகளாக்கி மறுசுழற்சி காக பல்வேறு தொழிற்சாலைகளுக்கு அனுப்  பப்படுகிறது. இந்நிலையில் வெள்ளியன்று (ஜூன் 18)  அதிகாலை ரப்பர் தூள்கள் குவித்து வைத்தி ருந்த கிடங்கின் ஒரு பகுதியில் திடிரென தீ பற்றியுள்ளது. பிறகு தீ காற்றின் வேகத்தால் மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி யது. உடனடியாக அபாய ஒலி எழுப்பப்பட்டு  அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் வெளி யேற்றப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து கும்மிடிப் பூண்டியில் இருந்து 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் ரசாயனம் கலந்த தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ விபத்து காரணமாக ஏற்பட்ட கரும்புகை யால் அருகில் வசிப்பவர்களுக்கு கண் எரிச்  சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டது. தீ விபத்து தொடர்பாக பாதிரிவேடு காவல்  துறையினர் வழக்குப் பதிவு செய்து தீ  விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட ரப்பர் தொழிற்சாலையின் அருகாமையில் தனியார் எரிவாய்வு நிரப்பும் ஆலை உள்ளதால் முன்  னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதி யில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டு கூடுதல்  தீயணைப்பு வாகனங்கள் அங்கு தயார் நிலை யில் வைக்கப்பட்டன. இந்த தீ விபத்தில் சுமார்  50 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது.

;