விருத்தாசலம், ஜன. 30- விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட சித்த லூர் பகுதியில் குடிநீர், கழிவுநீர் கால்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு அப்பகுதி பொதுமக்கள் ஞாயிறன்று (ஜன. 30) சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட் ்சிக்கு உட்பட்ட 33ஆவது வார்டு சித்தலூர் பகுதியில் சுகாதாரமான குடிநீர், கழிவுநீர் கால் ்வாய், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக அமைத்து தர வலியுறு த்தி விருத்தாசலம் பெண்ணாடம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் காவல்துறை, நகராட்சி அலுவ லர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். மேலும் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் எச்ச ரித்தனர்.