districts

img

ரயில் சேவையில் மாற்றம்

சென்னை,அக்.10- சென்னை ரயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய பினாகினி விரைவு ரயில் , சென்னை சென்ட்ரல்- கூடூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் கூடூரில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரயில் , கூடூர்- சென்னைசென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல் சென்னை சென்ட்ரல்- சாய் நகர் ஷீரடி, சென்ட்ரல்- விஜயவாடா, சென்ட்ரல்- அவுரா ரயில் புறப்படும்நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.