districts

img

புதுப்பொலிவு பெரும் வில்லிவாக்கம் ஏரி

சென்னை. செப்,24- சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் உள்ள 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியை மறுசீரமைப்பு செய்து  பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றப்பட உள்ளது.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் 37 கோடி ரூபாய் செலவில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இயற்கை எழிலுடன் கூடிய இந்த ஏரியில் நடைப்பயிற்சி செய்வதற்கான வசதி, குழந்தைகள் பூங்கா, விளையாட்டு மைதானம், திறந்தவெளி திரையரங்கம், கண்கவர் விளக்குகள், செயற்கை நீரூற்று உள்ளிட்டவைகள் அமைக்கப்படுகிறது. குறிப்பாக ஏரியின் ஒரு கரையில் இருந்து மறு கரையை கடந்து செல்லும் வகையில் கண்ணாடி தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டு வருவது இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பு. பாலத்தின் இரு கரைகளிலும் தண்ணீருக்கு மிக அருகில் உணவகங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் பணிகள் முழுமை பெரும்  நிலையில் இந்த பாலம் மக்கள் பயன் பாட்டிற்கு வந்தால் அண்ணா மேம்பாலம், கத்திப்பாரா மேம்பாலங்களின் வரிசையில் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக மாறும் என கருதப்படுகிறது.

;