districts

img

தடுப்பூசி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் ஏமாற்றம்

கடலூர், ஜூன் 7- கடலூர் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப் பாட்டால் அரசு மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப் பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 மாதங்களாக கடலூர் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தடையின்றி பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையே கடலூர் மாவட்டத்திற்கு போதிய தடுப்பூசிகளை அரசு ஒதுக்க வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திங்கட்கிழமை காலை நிலவரப்படி மாவட் டத்தில் 840 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருப்பு இருந்தது. தடுப்பூசி முகாம் காரணமாக மாவட்டத் தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்  டது. இதனால் கடலூர் அரசு தலைமை மருத்து வமனை, விருத்தாசலம் அரசு மருத்துவ மனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவ மனைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி அனுப்பி வைக்கப்படவில்லை. ஏற்கனவே கடலூர் வட்டாரத்தில் இரண்டு  இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

இதனால் அந்த இரண்டு மையங்களுக்கும், கம்மாபுரம், நடு வீரப்பட்டு, சிவக்கம், மங்களூர், பண்ருட்டி, மருங்கூர், நல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செகுத்துவதற்கு மட்டும் தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே ஏராளமான பொதுமக்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை உட்பட அனைத்து மருத்துவமனைகளுக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள திரண்டனர். அப்போது அங்கிருந்த செவிலியர்கள், மருத்துவமனையில் தடுப்பூசி இல்லை. அடுத்து வந்தால் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும் என்று கூறினர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுவரை கடலூர் மாவட்டத்தில் 2 லட்  சத்து 34 ஆயிரத்து 619 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் முதல் தவணை  தடுப்பூசி ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 711  பேருக்கும் இரண்டாவது தவணை 52 ஆயி ரத்து 908 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

;