சென்னை பெருநகர காவல் துறை சார்பில் ராணி மேரி கல்லூரி வளாகத்தில் “சிற்பி” திட்ட மாணவர்கள் “இயற்கையை பேணுவோம்” என்ற தலைப்பில் 5 லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து வனத்துறையினரிடம் வழங்கினர். மேலும் 5,000 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர். இதில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.