districts

img

பொங்கல் விழா

நெமிலி ஒன்றியத்தில் பொங்கல் விழா

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக கழகச் செயலாளர்,  ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு ஆகியோர் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி வடிவேலு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் நசீர், ஒன்றிய அவைத் தலைவர் புருஷோத்தமன், துணை செயலாளர்கள் முகம்மது அப்துல் ரகுமான், பாண்டியன், பாரதி ஜெயச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் விநாயகம், அரிகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி, வாலிபர் சங்க பொறுப்பாளர் வி. செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அங்கினாம்பட்டியில் சமத்துவ பொங்கல் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே அங்கினாம்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சக்தி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. சஞ்சீவ் குமார் முன்னிலை வகித்தார். காந்தி, பார்த்திபன் முருகன்,கிளை நிர்வாகிகள் விஜய் ஆனந்த் சம்பத் ஜெயசீலன் சிவகுமார் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்ன கவுரன் பரிசு, சான்று வழங்கினார்.

தட்டப்பாறையில் பொங்கல் விளையாட்டு விழா

குடியாத்தம் தாலுகா, தட்டப்பாறை கிராமத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. ஜெ.கோவிந்தராஜ், குணாநிதி, சுந்தராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.எஸ்.ராமராஜன், எம்.அரிஷ், மதன், எஸ்.தருண், எஸ்.சிந்தன், கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் கே.சாமிநாதன், எஸ்.சிலம்பரசன் பரிசுகளை வழங்கினர். இதில் குடியாத்தம் தாலுகா தலைவர் ஆர்.பாபு, செயலாளர் எஸ்.கோடீஸ்வரன், எஸ்.சண்முகம்.பி.சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.