districts

சென்னையில் செல்லப்பிராணிகளை வளர்க்க கட்டாயம் உரிமம் தேவை

சென்னை, அக்.1- சென்னை மாநகராட்சி யில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கான ஆர்வம் பொதுமக்களிடம் அதி கரித்து வருகிறது.  பொதுவாக, பாதுகாப் பிற்காகவும், மன மகிழ்ச்சிக் காவும் நாய், பூனை, பறவை  இனங்கள் அதிக எண்ணிக் கையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி விதிகளின் படி செல்லப் பிரா ணிகள் வளர்க்கும் உரிமை யாளர்கள் அதற்காக உரிமம்  பெற்று இருக்க வேண்டும். இதற்கான மையங்களில் செல்லப் பிராணிகளுக்கான உரிமம் ரூ.50, கட்டணத்தில் வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.  செல்லப் பிராணி களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் திரு.வி.க.நகர்,  நுங்கம்பாக்கம், கண்ணம் மாபேட்டை, மீனம்பாக்கம் ஆகிய மையங்களில் இலவ சமாக சிகிச்சை அளிக்கப் படுகிறது. வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை  என்ற இலக்கினை அடையும்  வகையில் இந்த மையங்க ளில் அனைத்து செல்லப்  பிராணிகளுக்கும் வெறி  நாய்க்கடி நோய் தடுப்பூசி  முற்றிலும் இலவசமாக செலுத்தப்படுகிறது. தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை (அரசு விடுமுறை  நாட்கள் தவிர) இந்த கால்  நடை மருத்துவ சிகிச்சை மையங்கள் செயல்படு கிறது. அதனை முழுமை யாக பயன்படுத்தி கொள்ளு மாறு மாநகராட்சி கேட்டுக்  கொண்டுள்ளது.

;