districts

மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்த மருந்து

கண்டாச்சிமங்கலம், செப்.24- தியாகதுருகம் பகுதியில் சித்தலூர், பானையங்கால், ஒகையூர், அசகளத்தூர் நாகலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக சுமார் 3,500 ஹெக்டேர் பரப்பள வில் விவசாயிகள் மக்காச் சோளம் பயிர் செய்துள்ள னர். இந்நிலையில் வேளாண் உதவி இயக்குநர் சந்துரு தலைமையிலான வேளாண் அதிகாரிகள் பானையங் கால் மற்றும் சித்தலூர் கிரா மத்தில் பயிர்களை ஆய்வு செய்தனர். இதில் மக்காச் சோளத்தில் படைப்புழு தாக்குதல் காணப்பட்டது. மேலும் கடந்த சில நாட்க ளாக மழைப்பொழிவு இல்லாமல் பகல் நேர வெப்ப நிலை அதிகரித்து காணப்படு வதால் படைப்புழு தாக்கு தல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மானாவாரி மக்காச் சோள வயல்களில் மழை பொய்த்தால் நிலத்தில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்கும்போதுஆரம்ப நிலை பயிர்களுக்கு குளோ ரான்ட்ரானிலிப்ரோல் 18.5எஸ்.சி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.4 மி.லி, ப்ளு பெண்டிமைட் 48 எஸ்.சி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மி.லி. அளவும், 15  முதல் 20 நாட்களான பயிருக்கு அசாடிராக்டின் (1500 பிபிஎம்) ஒரு லிட்டர் தண்ணீ ருக்கு 5 மி.லி. அளவும், 40 முதல் 45  நாட்களான பயி ருக்கு எமாமெக்டின் பெனசோயேட் 5எஸ்.ஜி. ஒரு லிட்டர் தண்ணீ ருக்கு 0.4 கிராம், ஸ்பினிடி டோரம் 11.7எஸ்.சி. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மிலி, நோவாலூரான் 10 இசி ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மிலி அளவில் ஏதேனும் ஒன்றினை பயிரின் வளர்ச்சி பருவத்திற்கு ஏற்ப தெளித்து விவசாயிகள் பயனடையலாம் என ஆலோசனை கூறினார்.

;