districts

img

55 வயதில் பெண்களுக்கு ஓய்வூதியம் உழைக்கும் பெண்கள் தென்சென்னை மாநாடு கோரிக்கை

சென்னை, ஆக. 6 - அனைத்துவகையான பெண் ஊழியர்க ளுக்கும் 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென்று உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தி உள்ளது. ஒருங்கிணைப்புக் குழுவின் தென்சென்னை மாவட்ட 10வது மாநாடு சனிக்கிழமையன்று (ஆக.6) கிண்டியில் நடை பெற்றது. இந்த மாநாட்டில், பணியிடங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைக்க வேண்டு மென்ற மாவட்ட ஆட்சியரின் சுற்றறிக்கையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மருத்துவமனைகளில் பணியாற்றும் அனைத்துவகை ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், வீட்டுவேலை தொழிலாளர்களை தொழிற்தகராறு சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு இணை ஒருங்கி ணைப்பாளர் டி.ஜெயந்தி தலைமை தாங்கி னார். பி.வசந்தா செங்கொடியை ஏற்றி னார். அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் நிர்மலா வரவேற்றார். இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.விஜயா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் டி.சாந்தி சமர்ப்பித்தார். முறை சாரா சங்க மாவட்டத் தலைவர் டி.ஏ.லதா, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.தனலட்சுமி நிறைவுரையாற்றினார். திவ்யா நன்றி கூறினார்.

;