districts

img

சென்னை-அரக்கோணம் பாதையில் மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து

சென்னை,ஆக.11-  அரக்கோணம் யார்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சில மின்சார ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே காலை 9.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், ஆக. 12 (திங்கட்கிழமை) மற்றும் 14-ம் தேதிகளில் திருவள்ளூர் - அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் - திருத்தணி இடையேயும், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே காலை 11 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூர் - அரக்கோணம் இடையே யும் ஆக.12 மற்றும் 14-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. அரக்கோணம் - சென்னை சென்ட்ரல் இடையே காலை 11.15 மணி மற்றும் 12 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், அரக்கோணம் - திருவள்ளூர் இடையேயும், திருத்தணி - சென்னை சென்ட்ரல் இடையே மதியம் 12.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருத்தணி - திருவள்ளூர் இடையேயும், வேலூர் கன்டோன்மென்ட் - அரக்கோணம் இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சித்தேரி - அரக்கோணம் இடையேயும், சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே காலை 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையேயும் ஆக.12 மற்றும்14ம் தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.