districts

img

கொரோனா தொற்று சென்னையில் 50 ஆயிரத்தை கடந்தது!

சென்னை, ஜன. 16 - சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. 7 மண்டலங்களில் தொற்று எண்ணிக்i 3 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 7 மண்டலங்களில் புதிதாக 535 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று பரவல் மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த தொற்றுப்பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி எடுத்து வருகிறது. கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனி மைப்ப டுத்தப்பட்டவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள வார்டுக்கு 5 பேர் வீதம் 1000 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து அத்தி யாவசிய பொருள்கள், மருந்து கள் மற்றும் உணவுகள்உள்ளிட்ட பொருட்களை நேரடியாக அவர் களின் வீட்டிற்கே சென்று வழங்கி வரும் பணியை செய்கின்றனர். தனி மைப்படுத்தப்பட்டவர்கள் பாது காப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்  கிறார்களா எனவும் கண்காணித்து வருகின்றனர். சென்னையில் தற்போது 54 ஆயிரத்து 685 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தேனாம்பேட்டை மண்டலத்தில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்ணா நகர், அடையாறு, கோடம்பாக்கம், ஆகிய 3 மண்டலங்களில் கொ ரோனா பாதிப்பு தலா 6 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மாநகரில் உள்ள 39 ஆயிரத்து 537 தெருக்களில் 2,454 தெருக்க ளில் கொரோனா பாதிப்பு கண்டறி யப்பட்டுள்ளது. 1,591 தெருக்களில் 2 - 5 பேர், 583 தெருக்களில் 6 - 10 பேர், 280 தெருக்களில் 10 - 25 பேர் என கொரோனா தொற்று பாதித்தவர்கள் உள்ளனர். பெருங்குடி, வளசரவாக்கம், அம்பத்தூர், திரு.வி.க.நகர், ராய புரம் ஆகிய 5 மண்டலங்களில் தொற்றால் பதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தலா 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஆலந்தூர், தண்டை யார் பேட்டை மண்டலங்களில் தலா 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேனாம் பேட்டை, அண்ணாநகர், அடை யாறு, கோடம்பாக்கம், தண்டையார்  பேட்டை, இராயபுரம், திரு.வி.க .நகர் ஆகிய 7 மண்டலங்களில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த மண்டலங்களில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு உதவிகளை செய்ய வார்டுக்கு  கூடுதலாக 5 பேர் வீதம் 535 களப்பணியாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சென்னையில் 1535 களப்பணியாளர்கள் செயலாற்று கின்றனர்.