சென்னை, மே 11- ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.செல்வம், சி.சேகர், ஜெ.காந்திராஜன் தலைமை யில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் புத னன்று (மே 11) நடை பெற்றது. இதில் ஒருங்கிணைப் பாளர்கள் மு.அன்பரசு, ச.மயில், அ.மாயவன், தாஸ், கு.தியாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆ.செல்வம், சி.சேகர் ஆகியோர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு களில் ஜாக்டோ ஜியோ பலகட்ட போராட்டங்களை முன்னெடுத்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் போராட்ட களத்திற்கே வந்து, ஏன் வீணாக போரடிக் கொண்டிருக்கிறீர்கள், திமுக ஆட்சிக்கு வந்தவு டன் உங்கள் கோரிக்கை கள் அனைத்தும் நிறைவேற் றப்படும் என்று தெரி வித்தார். அதை தேர்தல் வாக் குறுதியாகவும் அறிவித்தார். ஆனால் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்திருக்கிறது. அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்திருக் கிறார். பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறார். அதை ஜாக்டோ ஜியோ பாராட்டு கிறது.
அதேநேரம் எங்களுக்கு சமூக பாதுகாப்பாக இருக் கக் கூடிய பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். கடந்த 7ஆம் தேதி நிதியமைச்சர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த சாத்தியமில்லை என சட்டமன்றத்தில் அறி வித்திருப்பதற்கு ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது அறிவிப்பு ஆசிரியர், அரசு ஊழியர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத் தியுள்ளது. புதனன்று நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பா ளர்கள் கூட்டத்தில். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த முதல்வர் உடனடியாக ஜாக்டோ ஜியோ ஒருங்கி ணைப்பாளர்களை அழைத்துப் பேசி பிரச்ச னைக்கு தீர்வு காண வேண்டும் என முதல்வருக்கு கடிதம் அளிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. முதல்வரும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவெற்றப்படும் என அவ்வப்போது தெரி வித்து வருகிறார். எனவே முதலமைச்சர் மே மாத இறுதிக்குள் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணை ப்பாளர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். பிரச்சனைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால் உயர்மட்டக் குழு மீண்டும் கூடி அடுத்தகட்ட நடவடிக் கைகள், போராட்டங்கள் குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.