districts

img

தத்தமஞ்சி ஏரியில் வீதிகளை மீறி மண் அள்ளும் ஒப்பந்ததாரர்கள்

திருவள்ளூர், மே 3- பொன்னேரியை அடுத்த  தத்தமஞ்சி ஏரியில் மண்  அள்ளுபவர்கள் விதிமுறை களை மீறி ஏரியில் இருந்த மிகப்பெரிய கருவேல மரங்களை  வெட்டி விட்டு மண் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம்,  பொன்னேரி வட்டம்,  தத்தமஞ்சி போளாச்சி யம்மன் குளம்,   வஞ்சி வாக்கம், காட்டூர் சுற்று வட்டார விவசாயிகள் ஏரி பாச னத்தை நம்பியும் நிலத்தடி  நீர் ஆழ்துளை கிணறுப்  பாசனத்தை நம்பியும் விவசாயம் பார்த்து வரு கின்றனர். இந்த நிலையில் காட்டுப்பள்ளியில் உள்ள  அதானி துறைமுகத்திற்கு சாலை அமைப்பதற்கு தத்தமஞ்சி ஏரியில்  சவுடு மண் அள்ளும் குவாரியை டெண்டர் எடுத்த நபர்கள்  ஏரியில் இருந்த மிகப்பெரிய கருவேல மரங்களை வெட்டி அகற்றி விட்டு,  விதிமுறைகளை மீறி மண் எடுப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.  ஏரியில் கரை உடைந்த பகுதியிலேயே மீண்டும் கரையை வெட்டி நூற்றுக் கணக்கான லாரிகளில் மண் அள்ளப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இது குறித்து கண்டு கொள்ளவில்லை. மேலும் வெட்டப்படும்  கருவேலம் மரம் குறித்து வனத் துறையினர் விசா ரணை நடத்தி சம்பந்தப்பட்ட குவாரி உரிமை தாரர்களி டம் அபராதம்  வசூலிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்ற னர். தத்தமஞ்சி, கடப் பாக்கம்,  ஆண்டார்மடம்,  வஞ்சிவாக்கம் சுற்று வட்டாரங்களின் நிலத்தடி நீருக்கு வேட்டு வைக்கும் விதத்தில் ஏரியில் விதி முறைகளை மீறி மண்ணள் ளப்படுவதை கண்காணிக்க  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக    ஆர்வலர்கள் கிராம பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

;