districts

img

பயன்பாட்டில் இல்லாத பழைய விமானங்கள் அகற்றம்

சென்னை,செப்.14- சென்னை விமான நிலை யத்தில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு, என்.இ.பி.சி., கிங்பிஷர், nஜட் ஏர்வேஸ், ஆகிய விமான நிறு வனங்களை சேர்ந்த பழைய விமானங்கள் அகற்றப்பட்டுள்ளன. என்.இ.பி.சி., கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ் ஆகிய விமான நிறுவனங்களின் பயன்படுத்தப்படாத 12 விமானங்கள், சென்னை விமான நிலையத்தின் வடமேற்கு பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.  2012-ம் ஆண்டு முதல், தற்போது வரை யிலான விமான நிறுத்தக் கட்டணம், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இதனால், சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் வருவாய் மொத்த மாக கிடைக்கும். இது தவிர, சென்னை விமான நிலை யத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களை இந்த பழைய விமானங்கள், பல ஆண்டு களாக ஆக்கிரமித்து இருந்தன. இப்போது இந்த விமானங்கள் அகற்றப் படுவதால், மற்ற விமானங் களை நிறுத்துவதற்கு கூடுதல் இட வசதிகள் கிடைக்கும்.  இந்த பழைய விமா னங்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக தொடார்ந்து நிறுத்தப்பட்டிருந்ததால் அதில் பல்வேறு வகை யான பறவைகள், அந்த விமானங்களுக்குள் கூடு கட்டி வசித்து இனவிருத்தி செய்து வந்தன. இத னால் விமானங்கள் புறப்ப டும் போதும், தரை இறங்கும்போதும், பறவை களால் ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது. தற்போது இந்த விமானங்கள் அகற்றப்பட உள்ளதால் இனிமேல் பறவைகளால் விமானங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

;