districts

img

திரைப்படத் தயாரிப்பின் எதிர்காலத்தை மாற்றியமைக்கப்போகும் புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் ஆப்டெக் பயிற்சி மையம் அறிமுகம்

சென்னை, டிச.1- ஆப்டெக்கின் மெய்நிகர் திரைப்பட தயாரிப்பு பயிற்சி மையம் (விர்ச்சுவல் புரொடக்‌ஷன் அகாடமி) அடுத்த தலைமுறை திரைப்படத் தயாரிப்பாளர் களை வெற்றிகரமாக உருவாக்கி வரு  கிறது. மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள ஆப்டெக்கின் விர்ச்சுவல் புரொடக்ஷன் அகாடமியில் இதற்கான ஸ்டூடியோ திறக்கப் பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பம், திரைப்படத் தயாரிப்பின் எதிர்காலத்தை வடிவமைப்பதோடு மாணவர்களின் படைப்பாற்றலுக்கு வழிவகுக்கிறது என்று ஆப்டெக் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான அதுல் ஜெயின் கூறினார். இதுபோன்ற நவீன தொழில்நுட்பம் இந்தியாவில் முதல்முறையாக ஆப்டெக் பயிற்சி மையத்தில் நிறுவப்பட்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார். இது இந்தியாவின் முதல் முழுமையான மெய்நிகர் தயாரிப்பு பயிற்சி மையம் என்றும் அவர் தெரிவித்தார். மாணவர்களுக்கு முழுமையான பயிற்சி, ஆழ்ந்த அறிவு மற்றும் திறன்களை வழங்கும் நவீன வசதிகளுடன் இது உள்ளது. விஎப்எக்ஸ், திரைப்படத் தயாரிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பிந்தைய ஆற்றல்மிக்க பணிகளுக்கு இந்த மையம் உதவும் என்றும் குறிப்பிட்டார்.  திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி, மெய்நிகர் விளையாட்டு, விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தல், கல்வி மற்றும் பயிற்சி, கட்டடக்கலை காட்சிப்படுத்தல், நேரடி நிகழ்வுகள் மற்றும் மெய்நிகர் கச்சேரி போன்ற வேகமாக வளர்ந்து வரும் உலகில் சிறந்து விளங்க தேவையான அதிநவீன திறன்களைக் கொண்ட படைப்பாற்றல்மிக்க நிபுணர்களைத் தயார்படுத்துவதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் ஜெயின் மேலும் கூறினார். இத்தகைய  நவீன ஸ்டூடியோ, திரைப்படங்களை தயாரிக்கும் போது வெளிப்புற படபிடிப்பினால் ஏற்படும் செலவுகள் 10ல் ஒரு பங்காக குறையும் என்று ஆப்டெக் துணைத்தலைவர் அபிர் ஐச் கூறினார். உலகின் எந்த ஒரு பகுதியையும் மெய்நிகர் முறையில் இந்த ஸ்டூடியோவில் கொண்டு வரமுடியும் என்றும் கூறினார். பொதுவாக வானிலை மாற்றத்தால் வெளிப்புற பட பிடிப்பு தடைபடும். ஆனால் இந்த தொழில்நுட்பத்தில் அதற்கு வாய்ப்பில்லை. ஒரு அறையில் அண்டார்டிக்கா பகுதியை உருவாக்கமுடியும். நியூயார்க் நகரின் பரபரப்பான சாலையை உருவாக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த தொழில்நுட்பத்தை கொண்டு உலகில்  ஹவுஸ் ஆஃப் டிராகன்கள், ரஷியன் டால் சீசன் 2, சிலோ, லூபின் மற்றும் பெங்குயின் போன்ற பிரபலமான ஒடிடி படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதையும் அவர்சுட்டிக்காட்டினார்.