districts

சென்னை பத்திரிகையாளர் சங்க புதிய நிர்வாகிகள்

சென்னை, பிப்.21- சென்னைப் பத்திரிகையாளர் சங்க (எம்.யு.ஜெ)  நிர்வாகி கள் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை (பிப்.20)  நடைபெற்றது.  இதில் 81.5 விழுக்காடு வாக்குகள் பதிவானது. தலைவராக எல். ஆர்.சங்கர் (போட்டோ எடிட்டர் தி  டைம்ஸ் ஆப் இந்தியா)   போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட  நிலையில் மற்ற பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில்  துணைத் தலைவர்களாக வே.புகழேந்தி (தினகரன்)  பிருந்தா சீனிவாசன் (இந்து தமிழ் திசை)  பொதுச்செயலா ளராக வ.மணிமாறன் (மக்கள் டிவி)  பொருளாளராக வே.சிறீதர்  ( விடுதலை)  இணைச் செயலாளராக  சு.குருவன்மிகநாதன் (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்)  செயற்குழு உறுப்பினர் ்களாக  திருமேனி சரவணன் (சன் டிவி),  த.இளங்கோவன் (முரசொலி)  சசிரேகா காந்தி ( சிகரம் மீடியா) ம.அய்யனார் ராஜன் (ஆனந்த விகடன்)  த.பழனிவேல் (தெக்கூர் அனிதா-  குமுதம்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் பதவியேற்ற நாளில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பொறுப்பில் இருப்பார்கள்.