சென்னை, ஜூலை 5- இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டில் 170 சதுர அடி நிலத்தை ஒப்படைக்கக்கோரி மெட்ரோ ரயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.61,843 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலை யில், பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடத்தில் மொத்தம் 40 நிலையங்கள் அமைய உள்ளன. இதில் 18 நிலையங்கள் தரைதளத்திலும், 12 நிலையங்கள் சுரங்கத்திலும் கட்டப்பட உள்ளன. இந்த வழித்தடத்தில் நிலங்களை கையப்படுத்தும் முயற்சியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது. எனவே, மெட்ரோ ரயில் பணிக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டில் 170 சதுர அடி நிலம் மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தேவைப்படுகிறது. எனவே, இந்த இடத்தை கையகப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல அருகில் உள்ள ஒரு சில கட்டிடங்களுக்கும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.