சென்னை, செப். 19 - பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ள பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க வலியுறுத்தி செவ்வாயன்று (செப்.19) தென்சென்னையில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பிரச்சாரத்தை தொடங்கினர். பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறையும், பாலியல் குற்றங்களும் அதிகரித்துள்ளன. இதனை தடுப்பதற்கு மாறாக, பிற்போக்கான கருத்துகளை ஆட்சியாளர்களே ஊக்குவித்து வரு கின்றனர். கும்பல் வன்புணர்வு போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். இவற்றை கண்டித்து அக்.5 அன்று டெல்லியில் மாதர் சங்கம் மாபெரும் பேரணியை நடத்துகிறது. இதனையொட்டி பேரணியின் கோரிக்கை களை விளக்கி தாம்பரத்திலிருந்து பிரச்சாரம் தொடங்கியது. தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், வேளச்சேரி பகுதிகளில் பயணக்குழு பிரச்சாரம் செய்தது. பயணக் குழுவினருக்கு ஆங்காங்கே மாதர் சங்கத்தினர் வரவேற்பளித்தனர். தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி தலைமையில் நடை பெற்ற இந்த பிரச்சாரத்தை மாநில செயற்குழு உறுப்பினர் வி.தனலட்சுமி தொடங்கி வைத்தார். சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகி கே.வனஜகுமாரி, மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜெ.ஜூலியட், நிர்வாகிகள் பிச்சையம்மாள், பிரேமாவதி, டி.விஜயகுமாரி, கவிதா, விஜயலட்சுமி, சித்ரா, செல்வி, சாந்தா தேவி, விஜயா உள்ளிட்டோர் பிரச்சாரக் கூட்டங்களில் பேசினர். இந்தக்குழு செப்.20 அன்று சைதாப் பேட்டை, மயிலாப்பூர், தி.நகர், சோழிங்க நல்லூர், மதுரவாயல் உள்ளிட்ட பகுதி களில் பிரச்சாரம் மேற்கொள்கிறது.