districts

தொலைதூர பேருந்துகளை முத்துக்கடை வழியாக இயக்க கோரிக்கை

ராணிப்பேட்டை, செப். 7- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அனைத்து தொலைதூர பேருந்து களும் ராணிப்பேட்டை, முத்துக்கடை, வாலாஜா வழியாக இயக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது. தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் ஆய்வுக் குழு கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்றது. அந்த கூட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் சார்பில் பல துறை கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை மனு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி கலந்து கொண்டு கோரிக்கை மனுவை அளித்து பேசியதாவது: ராணிப்பேட்டை மாவட்டம் தனி மாவட்ட மாக அங்கரித்துள்ள நிலையில் அனைத்து தொலைதூர பேருந்துகள் முத்துக் கடையிலிருந்து துவங்கி மீண்டும் இங்கேயே முடிவடையும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும், அரசு தொலை தூர பேருந்துகள் அனைத்தும் ராணிப் பேட்டை, முத்துக்கடை, வாலாஜா வழி யாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பறக்கும் சாலை, பைபாஸ் வழி யாக செல்லும் பேருந்துகள் வக்கீல் தெரு, பைபாஸ் சாலை சந்திப்பிலும், மகாவீர் நகர் புதிய பத்திர பதிவுத்துறை அலு வலகம் அருகிலும் பேருந்து நிறுத்த நிழற்குடைகள் அமைத்து தொலைதூர பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். ராணிப்பேட்டையிலிருந்து ஆற்காடு செல்லும் பேருந்துகள், கனரக வாகனங்கள் 4 கிலோ மீட்டர் பைபாஸ் சாலையின் இருபுறமும் சுற்றி ஆற்காடு புதிய மேம்பாலம் செல்வதால் எரிபொருள் விரயம், காலவிரயம்  ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் கண்ணன் மஹால் எதிரில் பைபாஸ் சுரங்க பாதை வழியாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பாரதி நகர் பகுதிக்கு நகரப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

;