districts

img

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மக்களவை உறுப்பினர் வெ.வைத்தி லிங்கம்

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மக்களவை உறுப்பினர் வெ.வைத்தி லிங்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தார். மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் அவரை வரவேற்றார். அப்போது, அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து இரு கட்சி தலைவர்களும் கலந்துரையாடினார்கள். இச்சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அரசு கொறடா அனந்த ராமன், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் வெ.பெருமாள், எஸ்.ராமச் சந்திரன், த.தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன், சீனுவாசன், பிரபுராஜ், கலிய மூர்த்தி, சத்தியா ஆகியோர் உடனிருந்தனர்.