districts

img

ருத்ரகுமாருக்கு தலைவர்கள் அஞ்சலி

அம்பத்தூர், டிச. 25- ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) ஷெல் கிளைச் செயலாளர் எம்.ருத்ரகுமார் (53) சனிக்கிழமை (டிச. 24) இரவு  காலமானார்.  அம்பத்தூர் மங்களபுரம் பகுதியில் சிபிஎம்,  வாலிபர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றினார். தனது சகோதரர் சாந்தகுமாருடன் இணைந்து கட்சிக்காக உழைத்தவர். சிஐடியுவில் இணைந்து தனது இறுதி மூச்சு வரை களப்பணி யாற்றினார். ருத்ரகுமார் உடலுக்கு கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல். சுந்தரராஜன், சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.லெனின் சுந்தர், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திரு வேட்டை, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மா.பூபாலன், இரா.முரளி, மாவட்டக்குழு உறுப்பினர் சி.சுந்தரராஜ். அம்பத்தூர் பகுதி செயலாளர் ஆர்.கோபி, ஆவடி மாநகராட்சி 10ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் அ.ஜான், யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் செயல் தலைவர் கிருஷ்ணகுமார், பொதுச் செயலாளர் பா.ராஜாராமன், பொருளாளர் ஜோஷி, ஷெல் கிளைத் தலைவர் சிவராஜ், பொருளாளர் வெங்கடேஷ், சிறு குறு தொழில் முனை வோர் சங்கத்தின் ஒருங் கிணைப்பாளர் கே.கிருஷ்ண சாமி, பி.என்.உண்ணி, சு.பால்சாமி, ஜி.மூர்த்தி, இ.பாக்கியம், என்.கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் ஞாயிறன்று (டிச. 25) மாலை திருமுல் லைவாயிலில் உள்ள மின்  மயானத்தில் எரியூட்டப் பட்டது.