ஊத்துக்கோட்டை,மே 12- சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை யை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. சென்னையில் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நீர் ஒப்பந்தப் படி கடந்த 5ந் தேதி ஆந்திர மாநிலம் கண்ட லேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் பூண்டி ஏரிக்கு 293 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது கிருஷ்ணா நீர்வரத்து 450 கனஅடியாக அதிகரித்து உள்ளது. ஜீரோ பாயிண்டுக்கு 533 கன அடி நீர் வருகிறது. வரும் நாட்களில் கண்டலேறு அணை யில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தண்ணீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி.தண் ணீரை சேமித்து வைக்கலாம். வியாழனன்று காலை நிலவரப்படி ஏரியில் 1.279 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினா டிக்கு 653 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் பேபி சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 13 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.