districts

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோ-மைனிங் முறை செயல்படுத்தப்படும் மேயர் ஆர்.பிரியா தகவல்

சென்னை, ஜூன் 2 - பெருங்குடியை போலவே கொடுங்கையூர் குப்பை கிடங்கிலும் குப்பை களை அகழ்ந்தெடுக்கும் பயோ மைனிங் திட்டத்தை விரைந்து செயல்படுத்த திட்டமிடப் பட்டுள்ளதாக மேயர் ஆர்.பிரியா தெரி வித்தார். பெருநகர சென்னை மாநகராட்சியின் தண்டை யார் பேட்டை மண்டலத்தில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புத னன்று (ஜூன் 2) நடை பெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மேயர், மாநகரத்தின் பிற மண்டலங்களை போலவே தண்டையார்பேட்டை மண்டலத்திலும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மண்ட லத்திற்கு உட்பட்டுள்ள குழந்தைகள், இளைஞர் நலன் மற்றும் கல்வி, பொது  சுகாதாரம் மற்றும் அலகு படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த உத்தர விடப்பட்டுள்ளது என்றார். ஆணையர் ககன் தீப் சிங் பேடி கூறுகையில், பக்கிங் காம் கால்வாயில் உள்ள ஆகாய தாமரையை அகற்ற மருந்து உபயோகித்தால் பிரச்சனைகள் எழும். அதனால் இயந்திரங்கள் மூலமாகவே அகற்ற படு கிறது. பொது சொத்துக்கள் மீது போஸ்டர்கள் ஒட்டுபவர் கள் மீது நடவடிக்கை எடுக்க  காவல்துறை நடவடிக்கை  எடுக்க பரிந்துரைக்க உள்ளோம் என்றார். இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஷ் குமார்,  சட்டமன்ற உறுப்பினர்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர்,  ஜெ.ஜெ.எபினேசர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

;