districts

img

மலக்குழிக்குள் மனிதர்களை இறக்கும் அதிகாரிகள் மீது கொலை வழக்கு சென்னை குடிநீர் வாரிய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 14 - சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் கழிவு நீரகற்று வாரிய தொழி லாளர் சங்கத்தின் 6வது மாநாடு ஞாயிறன்று (ஆக.14) ராமாபுரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மலக்குழிக்குள் மனிதர் இறங்க தடை செய்யும் சட்டத்தையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு களையும் அமல்படுத்த வேண்டும், வாரிய ஊழியர்கள் கழிவுகளை அகற்றும் போது உயிரிழந்தால் ஒரு கோடி ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை யும் வழங்க வேண்டும், வாரிய தொழி லாளர்களை முன் களப் பணியாளர்க ளாக அறிவிக்க வேண்டும், வாரிய பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும், பெருநகர சென்னை மாநகராட்சியின் விரிவாக்கம், மக்கள் தொகைக்கேற்ப ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் இ.காசிநாதன் செங்கொடியை ஏற்ற பி.வி.கண்ணன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். சிஐடியு மத்திய சென்னை மாவட்ட பொருளாளர் எஸ்.சந்தானம் துவக்கவுரையாற்றினார். சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பழனி,  வேலை அறிக்கையும், பொரு ளாளர் இ.ராஜன் வரவு-செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலாளர் வி.குமார் நிறைவுரையாற்றினார். சங்கத்தின் தலைவராக க.பீம்ராவ், பொதுச் செயலாளராக எம்.பழனி, பொருளாளராக இ.ராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

;