districts

கண்ணகி நகர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்,செவிலியர்கள் பற்றாக்குறை

சென்னை, செப்.6- கண்ணகி நகர் அரசு மருத்துவமனை யில் மருத்துவர், செவிலியர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை சோழிங்கநல்லூர் அருகே கண்ணகி நகரில் மாநகராட்சி மருத்துவனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற தினமும் பல நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் தற்போது மருத்து வர், செவிலியர்கள்  மற்றும் இதர பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி இங்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மருத்துவ அலுவலர்களின் 3  பணியிடங்கள், 8 செவிலியர்கள் பணியிடங்கள் மற்றும் அறுவை  சிகிச்சை அரங்கு பணியாளர்கள், மயக்க மருந்து நிபுணர் மற்றும் ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் பணியிடங்களும் காலியாக உள்ளன.   இப்பகுதியில் வசிக்கும் 30  ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்திற் கும் அதிகமான பேருக்கு இந்த மருத்து வமனை தான் சிகிச்சை வழங்குகி றது. மருத்துவமனையில் 2 பெண்  மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்பட்டா லும், பிரசவத்திற்கு வேறு மருத்து வமனைகளுக்கு அனுப்பப்படுகிறார் கள். இங்கிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனைக்கு கர்ப் பிணி பெண்கள் செல்ல அறிவுறுத் தப்படுகிறார்கள்.

இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வரு கின்றன என அப்பகுதியை சேர்ந்த வர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.  மதியம் வேளையில் மருத்துவ மனைக்கு வரும் வெளிநோயாளிக ளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் யாரும் இருப்பது இல்லை. அங்கு பணியமர்த்தப்பட்ட மருத்துவர் பயிற்சிக்காக சென்றுள்ளதாகவும் பணியாளர்கள் கூறுகின்றனர்.  இரவு பணி மருத்துவர்கள் அங்கு  பணியில் இல்லை. பெரும்பாலும் டாக்டர்கள் யாரும் அவசர உதவிக்கு  உரிய நேரத்தில் அங்கு இருப்பதில்லை. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி  உள்ளது. இதனால் வேறு மருத்துவ மனைகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே உடனடியாக கூடுதல்  மருத்துவ ஊழியர்களை நியமித்து பற்றாக்குறையை சமாளிக்க மாநக ராட்சி சுகாதாரத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

;